இலங்கைக்கு கால அவகாசம்: சுமந்திரன் புறப்பட்டார்?

ஜெனிவாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது பற்றி தரவு திரட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக
அறிவித்துள்ளார். முற்றிலும் புதிய பிரேரணையொன்று இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படும். நாம் அதனுடன் உடன்படாவிட்டால், இலங்கை விவகாரம் பேசப்படாமலேயே போய்விடும். உடனடியாக இந்த விவகாரம் பாதுகாப்பு சபைக்கோ, சர்வதேச நீதிமன்றத்திற்கோ செல்ல வாய்ப்பில்லை.

அதனால், இந்த பிரேரணைக்கு எம்மால் முடிந்தளவு ஆதரவை திரட்ட வேண்டும். பொது அமைப்புக்கள், கட்சிகளுடன் பேசி ஆதரவை திரட்டுவோம் என விளக்கமளித்துள்ளார்.

தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றபோதே இலங்கைக்கான கால அவகாச நீடிப்பு பற்றி ஆதரவு திரட்டவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments