நத்தாருக்கும் அனுமதியில்லை?தென்னிலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகளில் கணிசமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இலங்கை அரசு அவர்களிற்கானன சிகிச்சைகளை மறுத்தே வருகின்றது.

இதனிடையே நத்தார் பண்டிகையன்று வழமையைப் போன்று கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது வரையில் சிறைச்சாலைகளில் 3279 கைதிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 2584 கைதிகளும் 144 பேர் சிறைச்சாலை அதிகாரிகளுமாவர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 73 அதிகாரிகளும் 1189 கைதிகளும் குணமடைந்துள்ளனர் என்றார்.


No comments