மன்னாரில் திறக்கப்பட்டது தம்பபவனீ?மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்திற்கு சிங்கள பெயரான தம்பபவனீ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது .இன்று செவ்வாய்கிழமை முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் ஆரம்பமான இந்த திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், சுமார் 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.

இதற்கமைய, நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக ´தம்பபவனீ´ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மின் ஆலையின் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 8 ரூபாய் என்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்துக்கொள்ள முடியும் என திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு அதிகாரி வேலு சந்ரேஸ்கரன் தெரிவித்துள்ளார்.

  


No comments