மலையாளத்தில் பேசிய நியுசிலாந்து அமைச்சர்!


நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் பிரியங்கா (வயது 41) இவரது பூர்விகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர். இவர் சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து, தற்போது நியூசிலாந்தில் வதிவிட உரிமை பெற்றுள்ளார்.

அங்கு அரசியல் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவரான பிரியங்கா,  அங்கு தற்போது அமைச்சராக தேர்வாகி உள்ளார். நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  அதில்  ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன். இவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது முதலில் தனது தாய்மொழியான மலையாளத்தில்  நன்றி தெரிவித்து விட்டு உரையாற்றினார்.அவர் உரையாற்றிய காணொளி தற்போது  வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments