பிரான்சில் சவுதி இளவரசியின் வீட்டில் கொள்ளை!


பிரான்சின் தலைநகர் பாரிசின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்வாங்க் அவென்யூ ஜார்ஜ் V க்கு அருகில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் இளவரசி ஒருவரின் வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொருட்கள் களவாடப்பட்ட செய்தி அறிந்த இளவரசி அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை குறித்த வீட்டிலிருந்து 6 இலட்சம் பெறுமதியான உயர்தரப் பொருட்களை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

47 வயதுடைய இளவரசி கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அடுக்குமாடி வீட்டில் வசிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆடம்பரமான பைகள், கைகடிகாரங்கள், நகைகள் எனப் பல பொருடக்கள் காணாமல் போயுள்ளன.

No comments