கரிப்பட்டமுறிப்பில் மனித எச்சங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம் என்பவரது வயல் காணியில் நெல் விதைக்கப்பட்ட நிலையில் வரம்புகளை மண்வெட்டி மூலம் அமைக்க முற்பட்டார். அப்போது வெடிபொருள்கள் மற்றும் மனித எச்சங்கள் இருப்பது தென்பட்டது.

குறித்த தகவல் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதை அடுத்து கடந்த 3 ஆம் திகதி முதல் காவல்துறையினர் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைதினம் நீதிபதி குறித்த இடத்தைப் பார்வையிட வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments