கோத்தாவுடன் ஆலோசனை நடத்திய இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்ரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இச் சந்திப்பானது நேற்றைய மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதியும் அஜித் தோவலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலில் வர்த்தகம், புதிய முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிருத்தி திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியதுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பம் குறித்தும் தெரிவித்தார்.

ஏற்கனவே மிகவும் திருப்திகரமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு வலியுறுத்தினர்.

No comments