சிறுநீரகத்துக்காக, 6 மணிநேர பயண தூரத்தை 2 மணித்தியாலத்தில் அடைந்த காவல்துறையின் லம்போர்கினி!


இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லம்போர்கினி மகிழூந்தில்  இத்தாலிய போலீசார் சிறுநீரகத்தை கொண்டு சென்று உரிய நேரத்தில் சீர்துள்ளமை பலராலும் பாரப்பட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு உயிர்காக்கும் உதவியாக  மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தை அதாவது  (மணிக்கு 143 மைல்)  தூரத்தை கடந்துள்ளமை பலருக்கு ஆச்சரியப்படுத்தியுள்ளது, 

நீல மற்றும் வெள்ளை நிற லம்போர்கினி ஹுரேசியன் எல்பி 610-4 ஐ வடக்கு நகரமான படோவாவிலிருந்து 500 கிலோமீட்டர் (310 மைல்) தெற்கே ரோம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கே இவ்வாறு மகிழூர்ந்தை ஓட்டிச் சென்றடைந்துள்ளனர். 

ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய தீவிரமாக காத்திருக்கும் மருத்துவமனைக்கு சிறுநீரகத்தை சரியான நேரத்தில் வழங்குவதற்காக. காலை 10:30 மணிக்கு புறப்பட்டு, இரண்டு மணி நேரத்தில் வந்தடைந்துள்ளார், இந்த தூரத்தை கடப்பதற்கு பொதுவாக ஆறு மணி நேரம் ஆகும். உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் இந்த உதவியை செய்ய முடியாமையாக இருந்தமையால் காவல்துறையின் உதவி கோரியதாகவும் அதன் அடிப்படையிலேயே  காவல் துறையினர் இவ்வாறு கொண்டு செல்ல முடிந்ததாக கூறப்படுகிறது. 

உரிய நேரத்துக்குள் சிறுநீரகத்தை விரைவாக கொண்டு சென்றதனால் காவல்துறையினருக்கு மருத்துவ அதிகாரிகள், மற்றும் பொது மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments