சிவாஜி வைத்தியசாலையில்: பாம்பு கடித்தது?

 


தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிக்கப்படுகிறது.

கடற்கரையினை அண்டிய பிரதேசத்தில் பாம்பு வந்து சேர்ந்தமை பற்றி கேள்வி எழுந்துள்ளது.


No comments