நாயுடன் விளையாடிய பிடனுக்கு கால் முறிந்தது!


தேர்ந்தெடுக்கப்பட்ட அமொிக்க அதிபர் ஜோ பிடன் தனது நாயுடன் விளையாடும் போது வழுக்கியதில் அவரது வலதுகால் முறிந்துள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இச்சம்பவம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சிடி ஸ்கேன் செய்ததன் மூலம் அவரது வலது காலின் நடுவில் இரண்டு சிறிய எலும்புகளின் சிறிய எலும்பு முறிவுகள் காணப்பட்டன.

அத்துடன் அவர் பல வாரங்களுக்கு காலில் பூட்ஸ் காலணி அணிய வேண்டும் என மருத்துவர் கூறினார்.

அத்துடன் அவருக்கு பல வார நடைபயிற்சியும் தேவைப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


No comments