அரசின் காணித்துண்டு விவகாரம் சதியா?


இலங்கை அரசு இளையோருக்கான காணியென்ற பேரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கவுள்ளமை அம்பலமாகியுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் காலாகாலமாக அரங்கேறி வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்காகவே கண்துடைப்பிற்காக, தமிழ் மக்களுக்கு அவ்வந்த பிரதேச எல்லைக்குள் எஞ்சியிருக்கும் பயனற்ற காணிகளை வழங்கிவிட்டு, வளம் கொழிக்கும் இடங்களில், புதிதாக அபிவிருத்தி செய்யப்படும், பாசன நிலங்களில் வெளிமாவட்ட சிங்களவர்களைக் கொணர்ந்து குடியேற்றிக் கொண்டிருப்பதாக அம்பலமாகியுள்ளது. 


குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாது விடின் எதிர்காலத்தில் தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்களப் பிரதேசங்களாக மாறி விடும் பேராபத்து உண்டு. 

தற்சமயம் இலங்கையில் இருக்கும் அதிகார வரம்பு சட்டதிட்டங்களின் பிரகாரம், நிலம், நீர், மாவட்ட எல்லைகள் போன்ற அதிகாரம் மத்திய (கொழும்பு) அரசிடம் மட்டுமே உள்ளபடியினால், அவர்கள் நினைத்தபடி என்ன வேண்டுமென்றாலும் செயற்படுத்தலாம்.


ஆதலால் இலங்கையில் சிங்கள அரசு தாம் விரும்பியபடி நீர்வள, நிலவள அபிவிருத்தியை மேற்கொள்வதுடன், தனது கபடத்த னமான திட்டமிடல்களை அரங்கேற்றுவதன் மூலம், வெளிமாவட்ட சிங்களவர்களை அழைத்துவந்து இங்குள்ள வளமான, அபிவிருத்தி செய்யப்படும் பாசன நிலங்களில், தனியே சிங்களவர்களை மட்டுமே குடியேற்றி வருகின்றது. அதற்கான ஒரு கபட நாடகமே இது என்பதனை நாம் புரிந்து எதிர்கொள்ளவும், செயலாற்றவும் திடசங்கற்பம் கொள்ளல்வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்


No comments