திரும்பி வருகிறார் கருணா அம்மான்?

 


அம்பாறை - வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் இலங்கை இராணுவத்தால்

கொல்லப்பட்டு இன்றுடன் 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலையினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இலங்கை படைகளால் 400இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

அவர்களிற்கே கருணா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த தேர்தலில் அம்பாறையில் போட்டியிட்ட கருணா தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments