ஹைப்பர்லூப் தொழில்நுட்ப சோதனை நடத்திய விர்ஜின் நிறுவனம்


அதிவேக தரைவழி போக்குவரத்தின் எதிர்காலம் எனக் குறிப்பிடப்படும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப சோதனை முயற்ச்சியை விர்ஜின் தொடருந்து

நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லாஸ் வேகாஸுக்கு வெளியே நெவாடா பாலைவனத்தில் 500 மீற்றர் குழாய் வழி அதிவேக தொழில்நுட்ப சோதனைப் பயணத்தை நடதியிருந்தியிருந்தது. 

ஹைப்பர்லூப்பில் விர்ஜின் ஹைப்பூர்லூப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் இணை நிறுவனருமான ஜோஷ் கீகல் மற்றும் நிறுவனத்தின் பயணிகள் அனுபவத்தின் தலைவரான சாரா லுச்சியன் ஆகியோர் முதல் பயணிகளாக பயணித்திருந்தனர்.

குழாயினுள் காற்று அகற்றப்பட்டதால் 500 மீற்றர் தூரத்தைக் கடக்க 15 வினாடிகள் எடுத்திருந்தை காணொளிப் பதிகள் காண்பித்திருந்தன.

எதிர்காலத்தில் 670 மைல் வேகத்தில் மின்சார உந்துவிசையைப் பயன்படுத்தி பயணத்தைப் பயணிக்கும் நோக்கம் கொண்டது.

காந்த லெவிட்டேஷன்  புல்லட் தொடரூந்தில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்  குழாய்க்குள் குறைந்த அழுத்தத்தால் உருவாக்கப்படுகிறது.

சீனாவின் ஷாங்காய் மேக்லெவ், அதிவேக வணிக புல்லட் தொடரூந்து, 300 மைல் வேகத்தில் அதிக வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments