புயலா?படை எடுக்கும் இந்திய மீனவர்கள்?


புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் இந்திய மீனவர்களது படகுகளது அத்துமீறல் அதிகரித்துள்ளதாக உள்ளுர் மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

படத்தில் காணும் ஒளி ஆனது இந்திய இழுவைப் படகுகள் மாதகல் கடற்கரையில் இருந்து சுமார் மூன்று கடல் மைல்களுக்குள் தொழில் செய்யும் படகுகளின் ஒளிதான் .எமது மீனவர்கள் நிவார் புயல் காரணமாக கடலுக்கு போகமுடியாது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள போது அவர்கள் எமது கரையை அண்டி வந்து எமது கடல் பவளப்பாறைகள்,மீன்கள் தங்கி நிற்கும் கொடிகள்,பன்னாடைகள் போன்றவற்றை அழிக்கும் காட்சிகளே என உள்ளுர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் நிவார் புயல்வரப்போகிறது என்று முன்னமே அறிவித்து வேதாரண்யம் கோடியக்கரை நாகபட்டணம் மீனவர்கள் வேளாங்கண்ணி ஆற்றில்படகை கட்டிவைத்திருப்பதாகவும் இந்தியாவில் கரையோர மக்களுக்கு 27திகதி மட்டும் கடலுக்கு போக வேண்டாம் என்று அறிவித்து உள். இந்தநிலையில் படகுகள் எங்கியிருந்து வந்ததென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


No comments