பச்சையாக மீன் சாப்பிட்ட முன்னாள் அமைச்சர்?மக்கள் மீனை கொள்வனவு செய்யலாம் என்பதற்கு பச்சையாக சாப்பிட்டு காட்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கூறினார்.

மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார்.

No comments