சுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது?


யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை காவல்துறையினர்; நேற்று கைது செய்துள்ளனர்.


தனிப்பட்ட தகராறு ஒன்றே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர்; கூறுகின்றனர்.


குறித்த கொலை சம்பவத்துடன் 21 பேர் தொடர்பு பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.


இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சுழிப்புரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 32 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.


No comments