கத்திக்குத்து,வாள் வெட்டு தாராளம்?


தீபாவளி தினத்தன்று கோப்பாயில் மாட்டு இறைச்சி கடையில் கத்தி குத்து ஒருபுறம் நடந்து முடிய கிளிநொச்சி விசுவமடு பகுதியில் பெண் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தேநீர் கடையில் உணவருந்திக் கொண்டிருந்த போது ஒருவர் வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதனிடையே சுழிபுரம் கத்தி குத்து தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments