தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ் கிளையின் வேண்டுகோள்

பேர்ண், 09.11.2020

தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களானதியாகிகள், காலங்காலமாகஎமது இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்.

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்கள்- 

தமிழீழத் தேசியமாவீரர் நாள் 2020 -சுவிஸ்

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரியசுவிஸ்வாழ் தமிழீழமக்கள் அனைவருக்கும் தமிழீழவிடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் புரட்சிகரமானவணக்கம். தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேசவிடுதலைப் போராட்டத்தினையும் உலகிற்குஎடுத்துக்காட்டியதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில், தமிழினத்தின் விடுதலைக்காகக் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்கள்புனிதநினைவிடமாகவும்,தமிழர் வீரத்தின் குறியீடாகவும்விளங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள்,சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளநிலையில், தாயகத்திலும் மற்றும்ஏனைய நாடுகளிலும்பரந்துவாழும் தமிழ்மக்கள்,கொள்கைதவறாமல் இலட்சியப்பற்றுறுதியுடன் எழுச்சிகொள்ளும் 'நவம்பர் 27"தமிழீழத் தேசியமாவீரர் நாள் நிகழ்வானது,அனைத்துலகரீதியாகஆண்டுதோறும் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுவருவதுதாங்கள் அறிந்ததே.அதேபோல், இவ்வாண்டும் சுவிஸ் நாட்டிலும் அதற்கானஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீண்டும் அதிகரித்துவரும் கோவிட் 19இன்தாக்கம் காரணமாக,கடந்த28.10.2020அன்றுசுவிஸ் மத்தியஅரசினால் அறிவிக்கப்பட்டவிதிமுறைகளிற்கமைவாகஒன்றுசேரக்கூடியவர்களின்எண்ணிக்கைவரையறுக்கப்பட்டிருப்பதனால்,வழமைபோன்றுஇவ்வருடமாவீரர் நாள் நிகழ்வினைநடாத்துவதற்காகப்பிறிபேர்க் மாநிலத்தில் அமைந்துள்ளபோறூம் (குழசரஅ) மண்டப நிர்வாகத்தினரிடம் எம்மால்பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தற்பொழுதுபிறிதொருமண்டபத்தில்,சுவிஸ் மத்தியஅரசின் சுகாதாரவிதிமுறைகளுக்குஅமைவாகவரையறுக்கப்பட்டுள்ளஎண்ணிக்கையுடன் தேசியமாவீரர் எழுச்சிநிகழ்வைநடாத்துவதற்கானமாற்றுஒழுங்குகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இருப்பினும்,சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் அனைவரும் இணைந்தவகையில் இவ்வாண்டுமாவீரர் நாள் நிகழ்வினைவழமைபோன்றுநடாத்துவதுகடினமாக இருக்கும் என்பதனையும் அதற்கேற்றவகையில் ஒவ்வொருகுடும்பத்தினரும் தங்கள் இல்லங்;களில் தேசியமாவீரர்களைநினைவுகூர்வதற்காகக்கீழ்வரும்ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஎன்பதனையும் தங்களுக்குஅறியத்தருகின்றோம்.

தமிழீழத் தேசியமாவீரர்களைநினைவுகூரும் ஒழுங்குவிபரங்கள்-

1. மாநிலங்களில்,எமதுசெயற்பாட்டாளர்கள் ஊடாக,அவர்கள் பணியாற்றும் பகுதிகளில்வாழும்தமிழ்க்குடும்பங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வருகைதந்து மாவீரர் பொதுக்குறியீட்டுப்படம், மெழுகுதிரி, காந்தள் மலர் (காரத்திகைப் பூ) என்பன வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ளஎமதுஅலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதனையும் மேலதிக தகவல்களுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

2. ஒவ்வொருகுடும்பத்தினரும் தங்கள் இல்லங்களில்எம்மால் வழங்கப்படுகின்றமாவீரர் பொதுக்குறியீட்டுப் படத்தினையும்,தங்களிடம் இருக்கின்றமாவீரரானதங்கள் உறவுகளின்திருவுருவப்படங்களையும் இணைத்து,தமிழீழத் தேசியமாவீரர் நாள் (27.11.2020வெள்ளி) அன்று,ஐரோப்பியநேரம் 13:35மணிக்கு (தாயகநேரம் மாலை06:05மணி) மணிஒலிக்கவிடப்படும் (அனைவரும் அமைதியாகஎழுந்துநிற்றல்). தொடர்ந்துஅகவணக்கம்,ஐரோப்பியநேரம் 13:37மணிக்கு (தாயகநேரம்மாலை06:07மணி) மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்குச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி தேசவிடுதலைக்காகத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரர்களை நினைவு கூருமாறு வேண்டி நிற்கின்றோம்.

மேற்குறிப்பிட்டுள்ளநிகழ்வொழுங்கிற்கமைவாக,சுவிஸ் நாட்டில் உள்ளவழிபாட்டுத்தலங்கள்,கல்விநிறுவனங்கள்,பொதுஅமைப்புகள்,தனியார்நிறுவனங்கள்,வணிகநிலையங்கள்என்பவற்றிலும் உரியவாறுமுன்னெடுக்கப்படவேண்டுமெனகேட்டுக்கொள்கிறோம்.அத்தோடு,சிறப்பாகஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் நடைபெறும் தேசியமாவீரர் நாள் நிகழ்வானதுநேரலையாகஒளிபரப்பப்படும் என்பதோடு, அவை தொடர்பானவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.


அன்பானசுவிஸ் வாழ் தமிழ்மக்களே!

தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்குஅன்றுதொடக்கம் இன்றுவரைமுழுமையானஆதரவுகளைவழங்கிவலுச்சேர்த்துவருகின்றீர்கள். அதனடிப்படையில்,கடந்தகாலங்களில் மாவீரர் நாள்நிகழ்விற்காகநீங்கள் வழங்கியபங்களிப்பானதுதேசியமாவீரர் நாள் நிகழ்வோடுமட்டும் நின்றுவிடாதுதமிழீழவிடுதலைக்காய் தங்களைஅர்ப்பணித்துத்தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துநிற்கும் மாவீரர்,போராளிகளின் குடும்பங்கள் மற்றும் மக்களின் நிரந்தரமீள் வாழ்வாதாரதேவைகளுக்காகவும் முழுமையாகபயன்படுத்தப்பட்டமைதாங்கள் அறிந்ததே. இவ்வாறானதொடர் பங்களிப்பினால் மட்டுமேபோரால் பாதிக்கப்பட்டஎமதுமக்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்தமுடியும்.எனவே,தங்களதுதாராளஉதவிகளைத் தொடர்ந்தும் எதிர்பார்த்துநிற்கின்றோம்.

கோவிட் 19இன் பேரிடர் காலத்தில்,உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியமானவாழ்வைக் கவனத்திலெடுத்து,சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதாரபாதுகாப்புவிதிமுறைகளைஉரியமுறையில் கடைப்பிடிக்குமாறும்,தொடர்ந்துவரும் காலங்களிலும்; தாயக இலட்;சியம்  நோக்கியவிடுதலைப் போராட்டமுன்னெடுப்புகளுக்குத்தங்களின் புரிந்துணர்வுமிக்கஉணர்வுபூர்வமானஆதரவினையும்; முழுமையானஒத்துழைப்புகளையும்  வழங்கவேண்டும் எனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிகத்தொடர்புகளுக்கு: 0792031724இ 079 711 30 97இ 076 426 27 80இ 078 965 09 18

நன்றி.

''புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்''

விஜயரட்ணம் சிவநேசன் (ரகுபதி)
பொறுப்பாளர்
தமிழீழவிடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை





No comments