தென்னமரவடியில் பிக்குவின் பெயரால் 358 ஏக்கர் காணி அபகரிப்பு


திருகோணமலை அமைந்துள்ள தென்னமரவடி கிராமத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களை உள்ளடக்கிய தமிழர் மக்களின் 358 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் எல்லைக்கற்களை அவர்கள் நாட்டியுள்ளனர்.

குறிப்பாக பனிக்கயல் தொடக்கம் தென்னமரவடி பகுதி வரையான 358 ஏக்கர் நிலங்கள் புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டு அங்கு சிவில் பாதுகாப்புப் படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர் அத்துடன் அப்பகுதியில் பாரியளவு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என அப்பகுதிய மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

No comments