பிரான்சில் தாக்குதலுக்கு உள்ளானது காவல்நிலையம்


பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள சாம்பிக்னி-சுர்-மார்னேயில் உள்ள காவல் நிலையத்தை உலோக கம்பிகள் மற்றும் பட்டாசுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவே இத்தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.  

மத்திய பாரிஸின் தென்கிழக்கில் சுமார் ஒன்பது மைல் (15 கி.மீ) தொலைவில் உள்ள சாம்பிக்னி-சுர்-மார்னேயில் உள்ள காவல் நிலையத்தைத் தாக்க முயற்றுள்ளது இக்கும்பல்.

மூன்று ஆண்டுகளில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் ஆகும். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கட்டிடத்திற்குள் செல்ல கும்பல் முயற்சி செய்துள்ளது ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்திருந்தது.

எனினும் வன்முறை தாக்குதலில் எந்தவொரு காவல்துறையினரும் காயமடையவில்லை என பிரஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையத்தின் சாரளங்கள் மற்றும் மகிழுந்துகள் அடித்து நொருக்கப்பட்டதாக வெளிவந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.

No comments