கொவிட்-19 பரவல்! அமுலானது ஸ்பெயினில் ஊரடங்கு!


ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் அவசரகால நடவடிக்கையினை பிரதமர் பீட்ரூ சான்செஸ் அவித்துள்ளார்.

அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிராந்தியங்களுக்கான பயணத்தடையை அந்தந்த உள்ளூர் அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் புதிய விதிகளை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்குமாறு நாடாளுமன்றத்தை கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலையின் போது ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டது நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments