மருதனார் மடத்தில் வியாபாரிகள் போராட்டம்

யாழ்பாணம் மருதனார் மடம் சந்தைப் பகுதியில் வியாபாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று வியாழக்கிழமை காலை

வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புதிதாக அமைக்கப்பட்ட சந்தைப் பகுதியில் தங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யாததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளைச் சந்தித்த காவல்துறையினர் மற்றும் படையினர் வலிகாமம் தெற்குத் தவிசாளர் தர்சனைத் தொடர்புகொண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தனர்.

குறித்த பிரச்சினை குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் சந்தித்துவிட்டுப் முடிவினை அறிவிப்பதாக தர்சன் கூறியுள்ளார்.

No comments