மன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்!


மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் காவல்துறையினரின் வாகனம் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உந்துருளியில் பயணித்த கணவன், மனைவி, மற்றும் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த சிறுமி உட்பட தந்தை தாய் ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

No comments