தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ம் லெப் மாலதியன் நினைவு வணக்க நிகழ்வும்-பெல்சியம்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல்களப்பலியான பெண் போராளி 2ம் லெப்

மாலதி  நினைவுகளைச் சுமந்த வணக்க நிகழ்வானது 12/10/2020 திங்கள் அன்று antwerpen மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப்மாலதி அவர்களின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டுகடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு - பெல்சியம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழீழப் பெண்களின் புரட்சிக்கு வித்திட்டவர்களின்; நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில்; அரங்கம்நிறைந்த உறவுகளோடு எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள் இடம்பெற்றது.

கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடருக்கு மத்தியிலும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கானநடைமுறைகளைப்பேணி  இவ்வெழுச்சி நிகழ்வானது உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு, தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 

No comments