நன்றிக்கடன்?


முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நியமனங்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று வழங்கி வைத்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், நாட்டின் 44ஆவது பிரதம நீதியரசாகப் பதவி வகித்தவர். அவர் நாட்டின் இரண்டாவது தமிழ் பிரதம நீதியரசராக பதவி வகித்து 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார்.

யாழ்ப்பபாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான அவர், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்

No comments