கிளியில் தனிமைப்படுத்தல்:வடமராட்சியில் தேடுதல்?


யாழ்ப்பாணத்தை தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சியில் இரண்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் அவ்வாடைத் தொழிற்சாலையில் கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த அக்கா ,தங்கை இருவர் பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அதேபோன்று ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவரின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர் என கருதி வட்டக்கச்சியில் ஒரு குடும்பம் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த இரண்டு குடும்பங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு யாருக்கும் கொரனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வடமராட்சி மக்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள அவசர அறிவித்தலில் 50 பொதுமக்கள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் கொரொனா தொற்றிற்குள்ளான பெண் பயணித்த பேருந்து பழுதடைந்மையால் பருத்தித்துறை சாலை பேருந்தில் அவர் பயணித்து கொடிகாமத்தில் இறங்கியுள்ளார்.

குறித்த பருத்தித்துறை சாலை பேரூந்தில் பயணித்த 50வரையிலபான பொதுமக்கள் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.


No comments