புலிகளிடம் சரணாகதி அடைந்த அரச அமைச்சர்?

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ' மாகாணசபை முறைமைக்கு எதிராக தற்சமயம் காரசாரமாகப்

பேசிவருவதோடு  இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதென வும் கூறிவருகின்றார் .

கடற்படையில் ரியர் அட்மிரல் தரத்தில் பணியாற்றியவரே சரத் வீரசேகர , கடற்படை யிலிருந்து இளைப்பாறிய பின்னர் அரசியலில் ஈடுபட்டு தற்போது ஓர் இராஜாங்க அமைச்சராக இருக்கின்றார்

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவின் சகோதரர் மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர , வடக்கு - கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளது கரங்கள் ஓங்கியிருந்த காலத்தில் , யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக ஒரு பிரிகேடியரின் தரத்தில் பணியாற்றியிருந்தார் .

அப்போது கிட்டு என்றழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளது யாழ் . மாவட்ட தளபதியாகவிருந் தார் . இந்நிலையில் அன்று யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிலைகொண்டிருந்த பிரிகே டியர் ஆனந்த வீரசேகரவுக்கும் , தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே அவ்வப் போது தொலைத்தொடர்பாடல் மூலமான பேச்சுக்கள் இடம்பெற்று சில விடயங்கள் தொடர்பாக கோட்டைக்குள் இருந்த இராணுவத்தினரும் சமரசமாக நடந்து கொண்டிருந்தனர். எனவே , தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையிலான மோதல் நிலை தீவிரமடைந்திருந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் புலிகளுடன் சமரசப் பேச்சுக் களுக்கு முன்வந்த முதலாவது இராணுவ அதிகாரியாக பிரிகேடியர் ஆனந்த வீரசேகர விளங்கினார் .

பிரிகேடியர் ஆனந்த வீரசேகரவுக்கு உதவியாக உயரமான பருத்த உடம்பைக் கொண்டிருந்த கப்டன் கொத்தலாவல என்ற அதிகாரியும் அன்று யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தார் . கப்டன் கொத்தலாவலவைப் பார்த்து உங் களுக்கு பருத்த உடம்பு . கோட்டை மதில் மேல் நின்று எம்மை நோட்டமிட்டால் உங்களை நாம் இலகுவாக இனங்கண்டு இலக்குத் தவ றாது சுட்டுவிடுவோம் என்று வேடிக்கையாக வும் ஒரு தடவை கிட்டு குறிப்பிட்டிருந்தார் .

இதேவேளை கிட்டுவுக்கு ஆங்கில , சிங்கள மொழிபெயர்ப்பில் உதவுவதற்கு கண்டி திரித் துவக் கல்லூரியில் பயின்று பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட ரஹீம் என்றழைக் கப்பட்ட கனகரத்தினமும் இருந்தார் . இராணுவத் தரப்பில் பிரிகேடியர் ஆனந்த வீரசேகரவும் கப்டன் கொத்தலாவலவும் , புலிகள் தரப்பில் கிட்டு , ரஹீம் ஆகியோரும் யுத்த கைதிகள் பரிமாற்றம் , புலிகளால் கொல் லப்பட்ட படையினரின் சடலங்களைக் கையளித்தல் போன்றவை தொடர்பாக உரை யாடுவதால் அன்று சமரசமான நிலை ஏற்பட்டிருந்தது.

புலிகளைப் பகைப்பதை தவிர்த்து அவர்களோடு நம்பிக்கை தரும்வகையில் பிரிகேடியர் ஆனந்த வீரசேகர விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடத்து கொண்டார் . இப்புரிந்துணர்வு பிரிகேடியர் ஆனந்த வீரசேகரவையும் , கப்டன் கொத்தலாவல வையும் யாழ்ப்பாணக் கோட்டைக்கு வெளியே வந்து அன்று கிட்டு , ரஹீம் ஆகி யோரைச் சந்திக்கவும் இடமளித்திருந்தது. ஒரு தடவை பிரிகேடியர் ஆனந்த வீர சேகர , தனது பள்ளிக்கால நண்பரான அன்றைய பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் ஈ.கனகலிங்கத்தின் வீட்டுக்கும் தன்னை அழைத்துச் செல்லும்படி கிட்டுவைக் கேட்டார். இதற்கு கிட்டுவும் உடன்பட்டார். கனகலிங்கம் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்த ஈ.சபாலிங்கத்தின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் புலிகளது வாகனத் தொடரணியில் பிரிகேடியர் ஆனந்த வீரசேகர ஈ.கனகலிங்கத்தின் கந்தர்மடத்திலிருந்த வீட்டுக்கு பாதுகாப்புடன் அழைத்துச்செல்லவும் பட்டிருந்தார். பிரிகேடியர் ஆனந்த வீரசேகர மாணவப் பருவத்தில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கியவர். அவரைப்போலவே ஈ .கனகலிங்கமும் உதைபந்தாட்டத்தில் அவரது மாணவப் பருவத்தில் சிறந்து விளங்கினார். வடக்கு - தெற்கு பாடசாலை உதைபந்தாட்டப் போட்டிகளில் இருவரும் இளம்பராயம் முதல் அறிமுகமாகி நண்பர்களாக இருந்தவர்கள். எனவே , புலிகளுடன் முரண்படாத போக்கையே பெரிதும் தாம் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த காலத்தில் கையாண்டிருந்த பிரிகேடியர் ஆனந்தவீரசேகர பின்னாளில் இராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர பௌத்த துறவியாக மாறி புத்தங் தேரர் பெயரில் தற்சமயம் வாழ்ந்து வருகிறார். இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கும் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர வடக்கு - கிழக்கு அரசியல் நிலவரம் தொடர்பாக கடும்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இக்கட்டத்தில் இவரோடு ஒப்பிடுகையில் இராணுவத்தில் பணியாற்றி தற்போது ஒருபௌத்த துறவியாக மாறியுள்ள இவரது ககோதரர் வண.புத்தலங்கல தேரர் புலிகளோடு சமரசம் செய்யமுடியுமென்பதை முதலில் நிரூபித்துக்காட்டிய இலங்கை இராணுவ அதிகாரியாக நல்லெண்ணத்துக்கு யுத்த காலத்திலேயே சமிக்ஞை கொடுத்திருந்தார். ஆனால் தற்போது அரசியலில் ஈடுபட்டு யுத்தம் முடிந்த பின்னரும் சரத் வீரசேகர கொண்டுள்ள கடும்போக்கு , தென்னிலங்கையில் தமிழருக்கெதிரான நிலைப்பாடு எவ்விதத்திலும் மாற்றமடையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது .

No comments