4 ஆண்டுகளின் பின் பிரான்சுக்கு வந்து சேர்ந்தார் பிணைக் கைதி


கடந்த நான்கு ஆண்டுகளாக மாலியில் ஆயுதக் குழுக்களால் பிணைக் கைதியாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 75 வயது தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

பாரிசின் தென்மேற்கே உள்ள வில்லாகூாப்லே இராணுவ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சோஃபி பென்ரோனினை மக்ரோன் வரவேற்றனர். உறவினர்கள் கட்டித் தழுவினர்.

ஜனாதிபதி மக்ரோன் தனது விடுதலையில் மகிழ்ச்சியையும் நிவாரணத்தையும் வெளிப்படுத்தினார், மாலியன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்தை பிரெஞ்சு இராணுவம் தொடரும் என்று உறுதியளித்தார்.

இந்த வாரம் பிரான்ஸ், மாலி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று பிணைக் கைதிகளுடன் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments