இந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை

 வடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் சுகாதார தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய தொழில் நடவடிக்கைகளும் இலங்கையின் வடபகுதி மக்களிடையே கொரோனா அச்சத்தை அதிகரித்துள்ளது.


அத்துடன் அண்மையில் எல்லைதாண்டி தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் மன்னார் பகுதிய சேர்ந்த 79 கடற்றொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர்.


இந்நிலையில் கொரோனா தொடர்பிலான தற்போநைய நாட்டின் அசாதாரண நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டு கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிகமாக தடையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது .

No comments