இலங்கையில் 20வது மரணம்?


இலங்கையில் கொரோனா தொற்றால் நாட்டில் 20 வது மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-12 ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொழும்பு வத்தளையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் 49 தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

120 ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது என்று வத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இதில் 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்று இனங்காணப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments