சீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா?



இலங்கையில் PCR இயந்திரங்களில் பழுது. சீரமைக்க சீனா பொறியியலாளர் ஒருவர் வருகிறார்.

நாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம்.

இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச் சீர்செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து வர வேண்டும். தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.

சீன தொழில்நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ் பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments