மீனுக்குதலை:பாம்புக்கு வால்-கோத்தா சீனா பயணம்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்வார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் மற்றும் சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் அலுவலக பணிப்பாளர் யங் ஜியேஷி தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக் குழு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்போது சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு தூதுக்குழுவின் தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த அழைப்பையேற்றே விரைவில் ஜனாதிபதி கோட்டா பீஜிங் செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நீண்ட காலமாக சீன வெளிவிவகார அமைச்சின் பல்வேறு பதவிகளை வகித்த யங் ஜியேஷி   2001-2005 காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சீன தூதுவராகவும் 2007-2013 காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சீன ஆட்சி கட்டமைப்பில் அவர் உப பிரதமருக்கு நிகரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments