கிளிநொச்சியில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி!


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நீீீண்ட நேரமாக அப்பகுதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments