பேரவை: குடும்ப சொத்து?

யாழ்.பல்கலைக்கழக பேரவை ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி, துஜனபெரமுன பேரவையாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள்

முன்வைக்கப்பட்டுள் நிலையில்மேலுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளர்.

ஒருபுறம் தனது கட்சி உறுப்பினர்களான றுசாங்கள் கோடீஸ்வரன் என பலரையும் டக்ளஸ் நியமிக்க மறுபுறம் அங்கயனோ சித்தப்பா மகன் முதல் சமையல் கட்டு ஆள் வரையாக நியமித்துள்ளார்.

இந்நிலையில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமனக் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தம்பியையா சிவாராஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments