ஓயாது போராடும் பிரகீத் மனைவி!


காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள கேலிச்சித்திர கலைஞர் பிரகீத் தொடர்பில்  நீதியை நாட நான் இப்போது எல்லா இடங்களிலும் சென்றுள்ளேன். கடவுளைத் தவிர இப்போது எனக்கு வேறு எங்கும் செல்ல முடியாது என அவரது மனைவி சந்தியா தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் உத்தரவின் பேரில் காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் தொடர்பிலான கைது செய்யப்பட்ட அனைத்து இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்று காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலியாகொடா தொடர்பிலான குற்றவியல் விசாரணைக்கு முன்னர், மோதர காளி கோவிலுக்கு வந்து, நீதி செயல்முறையை முறைப்படுத்தவும், வழக்கில் சாட்சியங்களை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நீதிபதிகளிற்கு அருள்வழங்கவும் சந்தியா பிரார்த்திருந்தார்.


No comments