சத்தியமாக முடியாது?


இலங்கையில் துணைவேந்தர்களை அரசியல் பின்னணியில் நியமிப்பது வேண்டாமென பலரும் பேசியபடியிருக்க ஒருபடி மேலே சென்று கோத்தபாய ராஜபக்சவோ துணைவேந்தர் தெரிவிற்கு விண்ணப்பம் கோருதல் ,சிபார்சு என படம் காட்டியிருந்தார்.

ஆஹா நல்ல முயற்சியென பலரும் திரண்டு பாராட்டுக்களை முன்வைத்ததுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு தெரிவான துணைவேந்தர் தொடர்பில் மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தனர்.

அவரும் தன் பங்கிற்கு அனைவரும் சேர்ந்து தேரிழப்போமென அறைகூவல் விட புல்லரித்து நின்றன சமூக ஊடகங்கள்.

ஆனாலும் துணைவேந்தர் நியமனத்திற்கு காலை கையை பிடிக்க வேண்டிய சூழல் மாறாதென்பது மீண்டும் உறுதியாகியிருக்கின்றது.


பொதுஜனபெரமுனவின் ஆளென தன்னை சொல்லிக்கொள்ளும் நபரொருவர் தனது தற்பெருமையினை காண்பித்துக்கொள்ள பலாலியில் தனியே யாழ்.மாவட்ட தளபதியை சந்தித்து மாலை போட்டுக்கொண்டமை,கூப்பிடும் தனியார் கல்வி நிலைய நிகழ்விற்கு கூட ஓடோடி சென்றமையென துணைவேந்தர் புகைப்படங்களை பகிர்ந்து தொலைக்க இவரும் அப்படியாவென சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது தமிழ் சமூகம்

  



No comments