வவுனியா மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 119,811 வாக்காளர்களிற்கு 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கே.கெ.மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வினோநோதாரலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வாக்களித்தனர்.

மேலும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கை அளித்தார். அத்துடன் வெளிக்குளம் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாகணேசன் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் வவுனியாவில் மக்கள் வாக்கு சாவடிகளில் சுகாதார முறையை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இதேவேளை காலை 07.00 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை வவுனியா மாவட்டத்தில் 38 வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments