கிளிநொச்சி மாவட்ட வாக்களிப்பு நிலவரமும்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன .கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது.
மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெறுகிறது. இன்று காலை முதல் வாக்களிப்பதற்கு ஏதுவான காலநிலை நிலவிவருகின்றது.
வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவை நடைபெற்று வருவதையும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நடவடிக்கையை கண்காணித்து வருவதையும் அவதானிக்கமுடிகிறது.

அந்த வகையில் தற்போதைய நிலையில் மொத்தமாக 24ஆயிரத்து 317 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது இது மொத்த வாக்குகளின் அடிப்படையில் 26.36வீதமாகும் .

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பில் தொடர்ச்சியாக மக்கள் ஈடுபாடுகாட்டி வருகின்றார்கள். சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.No comments