யேர்மனி நடைபாதையில் தமிழீழத் தேசியக் கொடி!

ஜேர்மன் கேளின் (Köln) நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும்  அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்காக வைக்கின்றார்.தங்களது நாட்டுக்கொடியை பார்ப்பவர்கள் மகிழ்ச்சியில் தங்கள் கொடி இருக்கும் இடத்தில் தங்களால் இயன்ற பணத்தை அதன் அருகில் வைக்கின்றனர் அப்படி கிடைக்கும் பணத்தை தனது நாளாந்த செலவுக்காக அந்நபர் எடுத்துக்கொள்கின்றார்.

சுற்றுலா சென்ற வாறண்டோர்வ்  நண்பர் ஒருவர் தமிழீழ தேசியக் கொடியினை காண்பித்து வரையமுடியுமா? என வினவியுள்ளளார்? சம்மதித்த அந்நபர் 20 நிமிடங்களில் தேசியக்கொடியினை வரைகின்றேன் சுற்றிவிட்டு வாருங்கள் என்று அனிப்பிவைத்துள்ளார்.40 நிமிடங்கள் கழித்து அவ்விடத்துக்கு சென்ற நண்பர் ஆச்சர்யத்துடன் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்.

தமிழீழத் தேசியக் கொடியினை சிறப்பாக வரைந்ததுடன்  தேசியக்கொடிக்கு அருகில் 60 யுரோக்களும் வைக்கப்பட்டிருந்தது.அந்நபரானவர் தான் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை கொடிகளுக்கு அருகில் சேரும் பணத்தை இறுதியில்தானாம் எடுப்பார் அதனூடாக எந்த நாட்டவர் நங்களது கொடியினை அததிகமாக நேசிக்கிறார்கள் என்பதனையும் அறிந்துகொள்வாராம்.அதன் அடிப்படையில் இதுவரை தான் வரைந்த கொடிகளுக்கு ஆகக்கூடுதலாக 5 யுரோக்களையே வைத்துள்ளதாகவும் ஆனால் தமிழீழத் தேசியக்கொடியினை தான் வரைந்த குறுகிய நேரத்திற்குள் 2 பேர் 60 புரோக்களை வழங்கியுள்ளதாகவும் அது தனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்வாகவும் இருப்பதுடன் உங்களது நாட்டுப்பற்றுக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தமிழீழத் தேசியக்கொடி பற்றிய விபரத்தை அறிந்துகொண்டதுடன் இனிவரும் காலங்களில் தான் செல்லும் இடமெல்லாம் முதலில் தமிழீழத் தேசியக்கொடியை வரையப்போவதாகவும் தமிழர்களுக்கு நிச்சம் விடிவு கிடைக்குமெனவும் கூறியுள்ளார். அவ்விடத்திற்கு வருகை தந்த வேறு  இரு தமிழர்கள் அப்பணத்தை வைத்துள்ளனர் அத்துடன் நண்பரும் தனது பங்கிற்கு பணத்தை வைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

நண்பர் செய்த இச்செயலானது மிகப்பெரிய விடையமாகவே நான் பார்க்கின்றேன்.இச்செயலானது மிகவும் இலகுவாகவே எமது தேசிக்கொடி பன்னாட்டு மக்களிடம் சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் நீங்களும் அங்கே சென்றால் அந்நபருடன் உரையாடி ஊக்கம் கொடுங்கள்.

ஒவ்வொருவரும் தாயகம் நோக்கி தங்களால் முடிந்ததை செய்வதே காலத்தின் தேவை....!

நன்றி
முகநூல் பதிவு



No comments