தொடரும் கைது?பாரியளவான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறைச்சாலை காவலர்  மற்றும் இலங்கை விமானப் படையின் சிவில் அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டவர்களின் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெயாங்கொடை, பெம்முல்லை, கொரொஸ்ஸ மற்றும் உடுகம்பொல ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments