மாதிரி வாக்குச் சீட்டு! ஈபிடிபி வேட்பாளர் உட்பட நால்வர் கைது!


முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருகையில்,புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுடன் கட்சி ஆதரவாளர்கள் நடமாடுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவரும் கட்சியின் ஆதரவாளர் ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவருமாக நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


No comments