நவல்னியின் உடலில் கோலினெஸ்டெரே நஞ்சு! பேர்லின் மருத்துவமனை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிற்சை அளிக்கும் பேர்லின் சரிதே (Charité) மருத்துவமனை நவல்னிக்கு நஞ்சூட்டப்பட்டதை உறுதி செய்துள்ளது.

கோலினெஸ்டெரே என்ற பொருள் அவரின் உடலில் இருப்பதை மருத்துவ சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக மருத்துவமனை உதிறுயாகக் கூறுகின்றது.

இந்த அறிக்கை வெளியானதை அடுத்து ரஷ்யாவில் அவருக்கு சிகிற்சை அளித்த மருத்துவர்கள் நவல்னியின் உடலில் அவ்வாறான பொருள் இருக்கவில்லை என கூறுகின்றார்கள்.

நவால்னி கடந்த வியாழக்கிழமை சைபீரியாவில் உள்ள டாம்ஸ்கில் இருந்து மாஸ்கோவிற்கான ஒரு உள்ளூர் பறப்பில் ஈடுபட்டபோது வானூர்த்தியில் நோய்வாய்ப்பட்ட வெள்ளிக்கிழமை முதல் கோமா நிலையில் இருக்கின்றார்.

டாம்ஸ்கில் உள்ள வானூர்தி நிலையத்தில் அவர் குடித்த தேநீர் கோப்பையில் நஞ்சு வைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

ரஷ்யாவின் ஓம்ஸ்க் மருத்துவர்கள் கூறுகையில், 

கடந்த வார சோதனைகளில் அவரது உடலில் கோலினெஸ்டரேஸ் தடுப்பான்களின் அறிகுறியைக் காட்டவில்லை. இரத்தில் குறைந்த சர்க்கரையால் தூண்டப்பட்ட கோளாறால் அவருக்கு நோய் ஏற்பட்டதாக பரிந்துரைத்திருந்தார்கள்.


No comments