கச்சேரி வாள் வெட்டு: ஜவர் கைது!


யாழ்.மாவட்ட செயலக வாயிலில் அரச உத்தியோகஸ்த்தர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 'கனி' குழு என்ற வாள்வெட்டு குழவை சேர்ந்த 5 வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த நபர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மல்லாகம் பகுதியிலிருந்து இயங்கும் கனி குழு உறுப்பினர்கள் இவர்கள் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு வாள்கள், கைகோடரி, இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று ஆகிய கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். மேலும் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான அரச ஊழியரும்

கனி குழு என்ற வாள்வெட்டு குழவின் முன்னாள் உறுப்பினர் எனவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். யாழ்.மாவட்ட செயலக சுற்றுசூழல் அதிகாரசபையில் பணியாற்றும் ஊழியரே இன்று காலை வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

No comments