சத்தியமா விடவே கூடாது! ஒரு வாரத்தின்பின் வாய் திறந்த ரஜினி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரால் தாக்கப்பட்டு, தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிற, இன்று அது குறித்து கண்டனம் செய்துள்ளார்.

சம்பத்தப்பட்டவர்களை, சத்தியமா விடவே கூடாது… ரஜினிகாந்த் ஆவேசமாக கூறி உள்ளார்.

ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான  ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் அவர்கள்மீது கடுமையான தாக்கியதால், அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விசரணையிலும், உடற்கூறாய்வு சோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம்  தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  அனைத்து தரப்பனிரும் தமிழக காவல்துறையினரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படை யில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர். அப்போது, காவலர்கள்,  நீதித்துறை நடுவரை  ஒருமையில் பேசியும்,  மிரட்டிய சம்பவமும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சுமார் 1 வாரத்திற்கு பிறகு, தற்போது ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் பதிவிடுள்ள ட்வீட்டில், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து, மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும், விடவே கூடாது ” சத்தியமா விடவே கூடாது   என்று தெரிவித்துள்ளார்.

No comments