யாழிற்கு வந்த அபாயம் நீங்கியது?

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சநிலை நீங்கியுள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்திற்குள்ளான ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.


கடந்த 27 ஆம் திகதி விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

பின்னர் கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு 28 ஆம் திகதி 30 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தோற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வைத்தியசாலையிலிருந்து அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் அதற்கு முன்னைய நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு சிகிச்சையளித்தமைக்காக வீடுகளில் தனிமைப்படுத்தபட்டு இருக்கின்ற 7 உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் சிலருக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே கொரோனா சந்தேகத்தில்,யாழில் தனிமைப்படுத்தபட்ட 70 பொதுமக்களும்; இன்று மாலை விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றிருந்ததாக சந்தேகிக்கப்பட்டவருடன் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments