மீண்டும் முடங்கின பாடசாலைகள்: வெளிநாட்டு வருகையும் தடை!


வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை (14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது என வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான கோத்தபாயவின் மேலதிக செயலாளர் அறிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே இன்று முதல் அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளும் அரச பாடசாலைகளும் அரசாங்கத்தின் அறிவித்தலை பின்பற்றி எதிர்வரும் 17 வரை பாடசாலைளை மூடப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களும் அரசின் அறிவிப்பை பின்பற்றும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வாரமே பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தினுள் மீண்டும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments