பிரான்சில் முகக்கவசம் அணிவது கட்டாயம்! €135 தண்டணைப் பணம்!


பிரான்சில் வங்கிகள், கடைகள், உள்ளரங்கச் சந்தைகள் போன்ற மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படுகிறது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

முக்கவசம் அணியவது தொடர்பான அரசாங்கத்தின் ஆணையைப் பின்பற்றத் தவறியவர்கள் மீது இன்று திங்கள்கிழமை முதல் 135 யூரோக்கள் தண்டணைப் பணம் அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலைகளைத் தடுக்கும் முயற்சியாக மூடப்பட்ட பொது இடங்களில் முகமூடிகள் கட்டாயமாக்கியுள்ளது பிரஞ்சு அரசாங்கம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments