சிறீதரனை விட்டுவிடுவது நல்லது?

(சித்திரிப்பு படம்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; 2004 பொதுத் தேர்தலில் தான் வாக்களித்தமை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென சட்டத்தரணி குருபரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகள் சார்ந்தோர் விசாரிக்கப்பட வேண்டிய குற்றமாக முன்னிறுத்தி அவரை விமர்சிக்க கூடாது என நான் கருதுகிறேன். அவர் சொல்லியது மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஒன்றாயினும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாக இருப்பினும் அதை அப்படியே விட்டு விடுவது தான் நல்லது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணையின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் நோக்கில் சிறீPலங்கா தேசியக் கட்சிகளில், ஒட்டுக் குழுக்களில் இருக்கும் நபர்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு துணை போகக் கூடாது. சிறீதரன் அவர்களின் அரசியல் அர்ப்பணிப்பு தொடர்பில் கேள்வி எழுப்ப பல விடயங்கள் உள்ளன. இந்த விடயம் தேவையற்றது எனவும் குருபரன்  தெரிவித்துள்ளார்.

No comments