சிறீதரன் கைதா?: புதிதாக முறைப்பாடு?


2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்; 75 கள்ள வாக்குகளை தான் போட்டிருந்ததாக முன்னாள் போட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி செலன்ஸ்டின் என்பவரே இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.

ஏற்கனவே தேர்தல் திணைக்கள யாழ்.அலுவலகத்தில் இத்தகைய முறைப்பாட்டை செய்திருந்தார்.

எனினும் தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் மகிந்த தேசப்பிரியவோ தான் இத்தகைய முறைப்பாடு தொடர்பில் அறிந்திருக்கவில்லையென தெரிவித்திருந்தார்.ஆயினும் அவ்வாறு நடந்திருப்பின் அது பாரதூரமான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சிறீதரனிற்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments