உருவப்படுகின்றது மைத்திரியின் வேட்டி!


நல்லாட்சி மாற்றத்திற்கான தேர்தலின் போது மைத்திரியை ஜனாதிபதியாக்க மேற்குலகு சுமார் ஜந்து மில்லியன் டொலரை அள்ளிவீசியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது அது பேசு பொருளாகியுள்ளது.


இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழல், மோசடி குறித்து விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரியும் ரணிலும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் அவர் தெரிவித்துள்ளார்.

கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று (5) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியானது மேலைத்தேய நாடுகளின் ஒழுங்குப்பத்திரத்துக்கு அமையவே செயற்பட்டதாகவும்  இதன் காரணமாகவே நாட்டையும் மக்களையும் காட்டிகொடுத்து, அரசாங்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments